மரண அறிவித்தல்
செல்லையா பாலசுப்பிரமணியம்
(மாப்பாணவூரி, காரைநகர் – கனடா)
பிறப்பு: 15.11.1939 இறப்பு: 18.11.2024
கனடா காரை கலாசார மன்றத்தின் முதன்மை அனுசரணையாளர்களில் ஒருவரும், காரை இந்து பழைய மாணவர் சங்கத்தின் பிரதான அனுசரணையாளர்களில் ஒருவரும், ‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகையின் அபிமானியுமாகிய திரு.மகாதேவன் பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்புத்தகப்பனார் திரு. செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 18.11.2024 அன்று காரைநகர் மாப்பாணவூரி இல்லத்தில் எவ்வித நோய் நொடிகளும் இன்றி தனது 86வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் பின்னர் மகிழவாக இருந்த சமயத்தில் சிரித்த முகத்தோடு இறைவனடி எய்தினார்.
அமரர் செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்கள் SBS Lucky Centre – Grand Bazzar Jaffna, Bala Fancy House – Kayts, பாலினி ஸ்ரோர்ஸ் – காரைநகர் ஆகியவற்றின் முன்னாள் உரிமையாளரும்,
வேலணை பள்ளம்புலத்தை பிறப்பிடமாகவும், காரைநகர் மாப்பாணவூரி, கனடா ரொறன்ரோ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டவர்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா – இராசம்மா தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – இராசம்மா தம்பதியரின் பாசமிகு மருமகனும், ஜெயமணியின் ஆருயிர் கணவரும், அமரர் மகேஸ்வரி, சோமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், அமரர் வைரவநாதன், செந்தில்நாதன், தனலட்சுமி ஆகியோரின் மைத்துனரும், சிவலோகநாதன், மகாதேவன், மகேஸ்வரன், ஜெயராணி, ஜெயபாலன், ஜெயவதனி, ஜெயரமேஸ், பாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தி, பவானி, மோகனா, பேரின்பராசா, சுபாங்கனி, மனோரஞ்சன், சாயினி, பிரசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரணவன், பிரவீனா & கிருஷான், சரண்யன், அபிலாஸ், மயூரன், சாய் ஸ்ரேயா, சாய் நேத்ரா, மேதா, சாய் விசால், மதுரா, மாயோன், கவின், நேயா, ஆரா, அத்தினா, சித்தாரா, காயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் மாப்பாணவூரியில் உள்ள அவரது இல்லத்தில் 24.11.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெற்று, காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தொடர்புகளிற்கு:
ஜெயமணி – காரைநகர் 021 225 2269
சிவலோகநாதன் – கனடா 1 289 830 8490
மகாதேவன் – கனடா 1 416 716 7052
ஜெயராணி – கனடா 1 416 704 5199
மகேஸ்வரன் – USA 1 626 353 9745
ஜெயபாலன் – கனடா 1 416 451 0260
ஜெயரமேஸ் – USA 1 929 245 4047
ஜெயவதனி – கனடா 1 416 670 4676
பாலினி – கனடா 1 289 242 4620