காரைநகர் முல்லைப்பிலவினை பிறப்பிடமாகவும், காரைநகர் அல்லின் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் பேரம்பலம்(ஓய்வு பெற்ற உதவி
நிலஅளவை அத்தியட்சகர்) 21.10.2013 திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் – பொன்னுப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – பூரணம் தம்பதிகரின் அன்பு மருமகனும், பத்மாவதியின் அன்புக் கணவரும், சியாமளா(பிரான்ஸ்), பிறேமளா(கொழும்பு), முரளிதரன்(இலண்டன்), அனுஷா(கொழும்பு) ஆகியோரின்
அன்புத் தந்தையும், செல்வச்சந்திரன்(நேரு மாஸ்ரர், பிரான்ஸ்), முருகமூர்த்தி(அதிபர்-யாழ்ரன் கல்லூரி, காரைநகர்), தயாளினி, விக்கினேஸ்வரன்(ஆசிரியர் – பசறை தமிழ் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு
மாமனாரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, கிருஸ்ணபிள்ளை, முருகேசு, பாக்கியம் மற்றும் மனோன்மணி, கமலம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், செல்வராணி, கமலாதேவி, கங்காதேவி, காலஞ்சென்ற நீதிராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருளம்பலம், சண்முகசங்கரன், நடராசா, கமலவேணி ஆகியோரின் சகலனும், கோகுலன், இராகுலன், நகுலன், மயூரேசன், செந்தூரன், நிரோசன், நிருஜன், அபிதா, கௌசீகன், கிருத்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 24.10.2013 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு அன்னாரின் அல்லின் வீதியில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாம்பலோடை மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்: அல்லின் வீதி, காரைநகர்
குடும்பத்தினர் தொலைபேசி: 021 320 7332