சரவணமுத்து பரம்சோதி
(வெங்கடேஸ்வரா உரிமையாளர்)
இடைப்பிட்டி, காரைநகர்
காரைநகர் மணற்பிட்டியை பிறப்பிடமாகவும், இடைப்பிட்டி காரைநகர், ஆணைப்பந்தி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து பரம்சோதி அவர்கள் 13.06.2013 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரம்சோதி தேவகுஞ்சரியின் பாசமிகு கணவரும், செந்தூரன் (வெங்கடேஸ்வரா ஸ்ரோர்ஸ்), சிவதர்சினி(சிங்கப்பூர்) சாளினி ஆகியோரின் அன்புத் தந்தையாரும், காலஞ்சென்ற குமாரசுவாமி சுந்தரமூர்த்தி (கம்பளை வர்த்தகர்) – செந்தில்நாயகி தம்பதிகளின் மூத்த மருமகனும், காண்டீபனின் அன்பு மாமனும்,
காலஞ்சென்ற சிதம்பரநாதன் மற்றும் தனலட்சுமி தம்பதியரின் சம்பந்தியாரும், கருணாநிதி, சிவசோதி, கற்பகநாதன், கணேசன், பாக்கியவதி, தவமணி, கோகிலாவதி, சிவமணி, ஆகியோரின் அன்புச்சகோதரனும், ஹரிசனின் அன்பு பேரனுமாவார்.
அருணகிரிநாதன், இராசகுமாரி, கமலக்கண்ணன், சாந்தகுமாரி, யோகேஸ்வரி, பரமேஸ்வரி, சறோஜினிதேவி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும்
சிவானந்தன், சிவபாலன், இராஜேந்திரம் ஆகியோரின் மைத்துனரும், சுரேந்திரன், சொர்ணதேவி, சிவயோகன், நகுலி ஆகியோரின் சகலனும் ஆவார்.
இறுதிகிரிகைகள் அன்னாரின் ஆனைப்பந்தி இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் 16.06.2013 ஞாயிறுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் கோம்பயன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி அன்புடன் கேட்டு கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்: குடும்பத்தினர்
354ஃ7 பருத்திதுறை வீதி
ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்
தொலைபேசி 0094 21 222 5524