அம்பலவாணர் கனகசுந்தரம் | மறைவு: 20.01.2015

திரு.அம்பலவாணர் கனகசுந்தரம்
(Post master கனகசுந்தரம்)
நடுத்தெரு, காரைநகர்

மறைவு: 20.01.2015
காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய தபாலதிபர் அம்பலவாணர் கனகசுந்தரம் (20.01.2015) செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சோதிமணியின் அன்புக் கணவரும் அமரர் அம்பலவாணர் அன்னம்மா தம்பதிகளின் ஆசை மகனும் அமரர் நாகலிங்கம் அருளம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், அற்புதமலர் (கனடா), சிவமலர் (பிரான்ஸ்) அற்புதராசா (ஜேர்மன்) ஆனந்தராசா (காரைநகர்) சிவராசா (பிரான்ஸ்) அன்னமலர் (காரைநகர்)
ஆகியோரின் அன்புத்தந்தையும் அமரர் பாலச்சந்திரன் (பேபி – முன்னாள் ஆங்கில ஆசிரியர் யாழ்ற்ரன்
கல்லூரி) அமரர் ஸ்ரீஸ்கந்தராசா, இராஜதுரை (கிராமசேவையாளர் காரைநகர் J/43) தினமணி, கமலாதேவி, லோகேஸ்வரி ஆகியோரின்
அன்பு மாமனாரும் மீரா, ராகுல், கஜன், ரோஜினி, செந்தூரன், மயூரன், ஆர்த்திகள், அஜிதன், அருந்தா, அமிர்தா, அரிகரன், அரவிந்தன், மதுசன், மதுரா, மதுசங்கர், பவானந்தன், லக்சிகா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் காரைநகர் நடுத்தெருவில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைக்காக 22.01.2015 இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் சாம்பலோடை இந்து
மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மக்கள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்.
நடுத்தெரு, காரைநகர்.
தொ.பேசி இல 0213209261

கண்ணீர் அஞ்சலி!
திரு.அம்பலவாணர் கனகசுந்தரம்

பிரான்ஸ் வாழ் காரை மக்களின் புலம்பல்

அமரர். அம்பலவாணர் கனகசுந்தரம்

மண்ணில் : 27.04.1926 விண்ணில் : 20.01.2015

தில்லைக்கூத்தன் திருவடியில் அம்பலத்தின்
அன்பில் உதிர்த்த கனகசுந்தரம் ஐயா
கருணையின் வடிவமான சோதிமணியின்
கரந்தனை பற்றி அன்பான அழகிய ஆறு
செல்வங்களை பெற்று வாழ்ந்த அன்பு
வடிவமேயான எங்கள் ஐயா இறைவன்
திருவடியை அடைய ஏன் தான் அவசரம் கொண்டீர்களோ!

மண்ணுலக வாழ்க்கைச்சக்கரத்தில் வாழ்வாங்கு
வாழ்ந்ததுபோதுமென தில்லையம்பலத்தான்
பாத கமலங்களை பற்றிகொள்ள அவசரம் கொண்டீர்களோ!

உங்கள் பிரிவால் துயறுரும் உங்கள் அன்புச்செல்வங்களுக்கு
எப்படி ஆறுதல் கூறுவதென அறியாது வருந்துகின்றோம்.

எம்பிரான் தில்லைக்கூத்தனின் பாதகமலங்களை
சரணடைந்த ஐயாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டிநிற்கின்றோம்.

ஓம்சாந்தி!
ஓம்சாந்தி! சாந்தி!!
ஓம் சாந்த!ி சாந்தி!! சாந்தி!!!

பிரான்ஸ்வாழ் காரைமக்கள்
பிரான்ஸ் காரைநலன்புரிச்சங்கத்தினர்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

More From Author

திருமதி செல்லம்மா தில்லையம்பலம் | மறைவு – 31.Dec.2014 

அமரர் சுப்பிரமணியம் துரைசாமி | மறைவு – 26.Jan.2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *